Friday, May 15, 2015

கறையானாம் கதிர்வேலன்

மரந்துளைக்கும் மாபெரும் படை சமைக்கும்
அரவிற்கு இடமளிக்கும் சேவலுக்கு வாழ்வளிக்கும்
மறையாத கடவூர் நிலவின் கலையாத பித்தருக்கே
கறையானாம் கதிர்வேலன்

விளக்கம்:

மறையாத கடவூர் நிலவாம் அபிராமியின் மேல் கலையாத காதல் கொண்ட பித்தருக்கு
கறையானும் கதிர்வேலனும் ஒன்றாம்.

எங்கனம்?

கறையான் மரத்தினை துளைத்து உண்ணும்.
மாமரமாய் நின்ற சூரனை வேல் கொண்டு கதிர் வேலன் துளைத்தான்.

கறையான் பெருங்கூட்டமான படையை அமைத்து வரும்.
முருகன் தேவர் படையைக் கட்டி ஆண்டான்.

கறையான் தான் கட்டிய புற்றில் பாம்பிற்கு இடம் அளிக்கும்.
முருகன் தன் காலடியில் பாம்பிற்கு இடம் அளிப்பான்.

கறையான் சேவலுக்கு உணவாகி வாழ்வளிக்கும்.
முருகப் பெருமான் மரமான சூரனை சேவலும் மயிலுமாய் மாற்றி வாழ்வளித்தார்.


English meaning:

For those who have unwavering madness towards the never fading moon of tirukkadavUr,
termites and Murugan are the same.

How?

Termites pierce wood and eat it.
Murugan pierced Surapadman when he transformed himself into a tree with his spear.

Termites create huge swarms with soldier termites thereby making armies.
Murugan was the leader of the armies of the Devas.

Termite hills are used by snakes as their residence.
Murugan has a snake at his feet along with the peacock.

Termites become food for roosters and thereby give them life.
Murugan spared the life of Surapadman when he split his tree form into cocks (rooster and peacock).

No comments: