Thursday, May 14, 2015

வேசியிடம் முக்தி

உடை களைவாள் மெய் உணர்வளிப்பாள்
மணையழிப்பாள் பொருள் எல்லாம் பாழ் செய்வாள்
மறை இன்பம் தருவாள் உரைத்திடவும் முடியாது
கலை நிலவாம் கடவூராள் காதல் பித்தருக்கே
விலை மகளே வீடா வாள்

விளக்கம்:

கலை நிலவான கடவூரின் அபிராமியைக் காதலிக்கும் பித்தருக்கே
விலை மகளே நிலையாம் வீடு பேறாகும்.

எங்கனம்?

விலை மகள் தன் உடை களைந்து நிர்வாணமாவாள்.
வீடு பெற்றால் உடை இழந்து நிர்வாணம் ஆவோம்.
விலைமகள் உடம்பினைத் தீண்டி உண்மையான இன்ப உணர்வளிப்பாள்.
வீடு பேறு உடம்பை அழித்து மெய்ஞான இன்பம் அளிக்கும்.
விலை மகள் தலைவனின் வீட்டையும் பொருளையும் அழிப்பாள்.
வீடு பெற்றால் வீட்டையும் பொருளையும் விட்டொழிப்போம்.
விலை மகள் ரகசியமான (மறை) இன்பம் தருவதால் யாரிடமும் சொல்ல முடியாது.
வீடு பேறு மறையான வேதம் சொல்லும் இன்பம் தரும், அவ்வின்பத்தைக் கண்டவர் விண்டிலர்.

English meaning:

For those mad men who are in love with the full moon of tirukkadavUr,
a courtesan and mukthi or enlightenment are one and the same.

How?

The courtesan removes her clothes and becomes nude for her master.
Enlightenment results in the person losing body consciousness and thereby clothes.
The courtesan touches the body and provides true sexual pleasure.
Enlightenment leads to true spiritual joy.
The courtesan destroys the master's house and his wealth.
Enlightenment results in the person letting go of home and wealth.
The joy that a courtesan gives is secret and therefore cannot be disclosed to anybody.
The joy of enlightenment is that of the Vedas (maRai in Tamil means both hidden and the Vedas or any scripture in general) and is not disclosed by its nature.

No comments: