Wednesday, May 13, 2015

புளியப் பெருமாள்

குழம்பாக்கும் விதை தவிர்த்து ரசமாக்கும் 
கழுகேறும் காலடியில் அரவடங்கும் பேரூர்
தலத்தில் தோன்றிப் பிறவாதிருக்கும் கடவூர்
நிலவினைக் கலந்திருக்கும் பித்தருக்கேப்
புளியாகும் பெருமாளே

விளக்கம் 

திருக்கடவூரின் நிலவாம் அபிராமியைக் கலந்து நிற்கும் பித்துப் பிடித்தவருக்கெல்லாம்
புளியமரமும் பெருமாளாம் ஓன்றேயாம்.

எங்கனம்?

புளி குழம்பு செய்யும்
பெருமாள் மாயை எனும் குழம்பு செய்பவர்

புளியொடு விதை (பருப்பு) தவிர்த்தால் ரசம் செய்யும்
பெருமாள் பிறப்பென்னும் விதையைத் தவிர்த்து ரசம் செய்பவர்

புளிய மரத்தின் மேல் கழுகு ஏறும்
பெருமாள் கருடன் மீது ஏறுவார்

புளிய மரத்தின் காலடியில் பாம்பு வாழும்
படுத்திருக்கும் பெருமாளின் காலடியில் ஆதிசேடன் அடங்குவான்

பேரூர் தலத்திலே பிறந்தும் பிறவாப் புளியான புளியமரம் இருக்கும்
பேரூராம் பூமியிலே பல முறை பிறந்த போதும் பெருமாள் பிறப்பற்று இருப்பார்

No comments: