களைத்து வந்தேன் அம்மா கடவூர் அம்மா
கடைத்தேற வழி சொல்லாயோ என் அம்மா
களைந்தும் வந்தேன் அம்மா கடவூர் அம்மா
உடை உடல் உயிர் உறு உணர்வெல்லாம் வெறுத்து
விடை வழி விடுதலை தருவாயே என் தாயே என்று
மலை மடு மாநிலம் எல்லாம் தேடிப் பின் ஓடி (களைத்து வந்தேன்)
அலைவதற்கொர் இடமுமில்லை அகத்தினிலே துணிவுமில்லை
நிலையானவளே முழு நிலவானவளே எனக்குமோர்
நிலையருளாயோ நீயிரங்காயோ நீலி நினை நாடி
உலை கொதி நீரென உலகினிலே உழைத்து உழன்று (களைத்து வந்தேன்)

No comments:
Post a Comment