Tuesday, June 10, 2008

பொன் - முற்று பகுதி

அரவம் எழுந்தது மாணிக்கம் கக்கியது!
உள்ளத்தே செம்மை பிறந்தது!
மாலை மனதோடு இயைந்தது!

ஆகா!
இது ஞான வானிடை சுரக்கும் அமுத ஊற்று!
ஆகா!
இது உள்ளத்திற் பிறந்து உலகத்தே விரிந்த
கவியின் கற்பனை!
ஆகா!
இது படைப்புக் கோலத்தில் பராசக்தி இடும் செம்மண்!
ஆகா!
இது ஆகாயத்திடை கலக்கும் ஆலய மணியோசை!
ஆகா!
இது தவச் சிவன் மேல் அனங்கன் எய்த ஆனந்த பாணம்!

மாலையே! மதன வடிவே!
மோகனமாய்ச் சிரிக்கும் பொற்சிலையே!
கையிரண்டில் சேர்க்க முடியா புதையலே!
கண் மூடி உன்னைக் கலக்கிறேன்!
இனி
என் மனமெல்லாம்
பொன்! பொன்! பொன்!
ரசம்! ரசம்! ரசம்!

3 comments:

Anonymous said...

:-)
I especially liked the following lines -
.ullaththe semmai pirrandhadhu
.idhu padaippuk kolaththil parashakthi idum semmann
.kann moodi unnaik kalakkirren
.ini en manamellaam pon

# The truly grand finale in this last of the many, is indeed filled with the Splendour that the whole series was reaching out to!

Mathangi said...

Hi

I think you must spell "BaaNam" with the periya "Na".

By the way, how to post in thamizh?

Ippadiku
Ambujam

Agnibarathi said...

வணக்கம் பார்வதி,

தமிழில் எழுதவும் என்று அன்புக் கட்டளையிட்ட தாங்களே இப்படி ஆங்கிலத்தில் கருத்தெழுதவது முறையா? ;-) (நகைச்சுவையாய் சொன்ன சொல் - கருத வேண்டாம்)

இடைவிடாது இந்தப் வலைப்பூவைப் படித்து வருவதற்கு மிக்க நன்றி


வணக்கம் அம்புஜம்,

தவறைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. பல காலம் கழித்து தமிழில் எழுதுவதால், தூசி சற்று அதிகமாகவே உள்ளது. தமிழில் தட்டுவது மிக எளிது. கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பில் அதன் விளக்கம் உள்ளது.

http://help.blogger.com/bin/answer.py?hl=en&answer=58226

விரைவில் தங்கள் வலைப்பூவில் தமிழ் மலரட்டும்

வருகைக்கு மிக்க நன்றி.