முன்னொரு காலத்தில் எழுதிய கவிதைகள் இவை. தாகூரின் "Stray birds"ஐத் தழுவியவை. அப்பொழுது அவளோடு எனக்கு நெருக்கம் அதிகம். எனவே உரிமையோடு விளையாடியதால் வந்த "வினை".
பி.கு: பாடல்களின் பொருள் புரியாவிட்டால் பதிவில் குறிப்பிடவும். விளக்கம் தருவேன்.
நள்ளிரவின் இருட்டில்
தோடு கழற்றிக் கேட்டாள்
நிலவு தெரிகிறதா?
---
வேட்டை முடித்து தோலுரித்து
வீடு வந்தவனைக் கண்டு
பிள்ளையைக் கொல்வீரோ என அஞ்சினாள்
---
காலால் காதைத் தொட்டான்
கொல் எனச் சிரித்து சொன்னாள் வெற்றி
எனதே அரை மனிதா
---
கூந்தல் முகர்ந்து
தள்ளிச் சென்றவனைக் கேட்டாள்
தாழம்பூ வாசமோ?
---
பாதம் பற்றி
மெட்டி இடுகையில்
நாக்கை நீட்டினாள்
---
நிலவில் கள் குடித்து
அவனிடம் சொன்னாள்
நான் பிடித்த ஆளுக்கு மூன்று கண்
---
மாங்கனியே என்றான் ஆசையோடு
பதறி எழுந்தாள்
பிள்ளை கோபிப்பான் என்று
---
கையில் நெறுப்பள்ளிக் கொடுத்தாள்
தலையெல்லாம் ஈரம்
பனி வேறு பொழிகிறது
---
குரல்வளையைக் கையால்
இறுக்கிப் பிடித்தாள்
கொலையும் செய்வாள் பத்தினி
---
நகங் கிள்ளாது இருப்பவளிடம்
சொன்னான் தமையன் மேல் பரிவோ?
---
வண்டியேறி வந்தவளைப் பார்த்து
எச்சரித்தான் மாடு மிரளப் போகிறது
---
மகிழ்வுடன் மணம் புரிய சம்ம்மதித்தாள்
மாமியார் தொல்லை இல்லை
---
அவன் அவளை நோக்க
கொங்கை இடை நின்ற
ஆரம் கசன்றது
---
---
---
மகிழ்வுடன் மணம் புரிய சம்ம்மதித்தாள்
மாமியார் தொல்லை இல்லை
---
கொங்கை இடை நின்ற
ஆரம் கசன்றது
---
காதல் இரவினில்
அவன் திலகம் சூடினான்
அவள் சாம்பலணிந்தாள்
---
No comments:
Post a Comment