இனியும் செய்யலாமோ தங்கமே. இன்னுயிர்க் கொலை
கனியும் காயுமுண்டு பசி தீர்க்க இனியும் செய்யலாமோ
பிணியன்றோ பாவம் பழுதன்றோ தங்கமே
இனிய விலங்கெல்லாம் விலங்கிட்டு உயிர் குன்றி
கொடிய வாழ்வெய்தி கொம்பறுத்து வாலறுத்து
தனியே தவித்தழுதால் தங்கமே தவறன்றோ எனவே (இனியும்...)
கண்ணுண்டு காண்பதற்கு காதுண்டு கதறல் கேட்பதற்கு
எண்ணும் மனமுண்டு எவர் வலியும் உணர்வதற்கு
கண்டால் குலை நடுங்கும் தங்கமே கேட்டால் உயிர் உருகும்
உண்ணவும் மனம் வருமோ உண்மை நீ அறிந்தால் பின் (இனியும்...)
புலையர்க்கு விடுதலை செய்தொம் பெண்டிற்கும் விடுதலையாம்
அலை கடல் சூழ் அவனியிலே அனைவர்க்கும் விடுதலையாம்
உலை படும் உயிர் மட்டும் தங்கமே உடலுறுகி உணர்வறுத்து
தளை பட்டு தவிதிருந்தால் தவரன்றோ தங்கமே (இனியும்...)
No comments:
Post a Comment