இறைவன் ஒருவன் நானறிவேன்
மறைவாய் உரைவதவன் என் மனத்தே
மறையும் ஒன்றே நானுரைப்பேன்
நிறைவாய் நின்றதோர் அமைதியிலே
ஒன்றே தொழுகை நானும் புரிவேன்
என்றும் வாழும் வாழ்க்கையதுவே
ஒன்றேயமுதம் நான் பெரும் பரிசு
நன்றாய்ப் பொழியும் கவி என்னும்தேன்
இறைவன் ஒருவன் ஒன்றாயிருக்க
அறியாக் கல்லும் மலரும் பெயர்த்து
முறையாய்க் கோவில் தொழுகை செய்து
பிரிப்பேன் ஏனோ என்னிடம் அவனை
ஆங்கிலத்தில் - http://agnibarathi.blogspot.com/2014/05/why.html
No comments:
Post a Comment