செய்க விணை செய்க விணை செய்க விணை செய்கவே - என்றும்
தோய்வின்றி சோர்வின்றி துயர் நீங்க துணிவோடு தவமாக (செய்க)
பொய்யுரையோம் புறம் பேசோம் பயமழிப்போம் விணை செய்தால்
உய்வடைவோம் உயர்வடைவோம் உயிர் வாழ்வோம் எனவே என்றும் (செய்க)
விணையல்லால் இங்கு நமக்கோர் வழியில்லை வாழ்வில்லை
விணை செய்தால் நமக்கென்றும் வலியில்லை சாவில்லை நமக்குத்
துணை நாமே நம் விணையே அவளுரைக்கும் நல்விணையே எனவே
திணையே ஆனாலும் துயர் நீங்க துணிவோடு தவமாக (செய்க)
தவமாகும் செய்த வினை தாயவள் துணையிருந்து தவத்திற்கு
வரம் தருவாள் வழியுரைப்பாள் விணை தீர்ப்பாள் வளம் செய்வாள்
அறத்தொடு அன்பும் அழகும் அகத்தே கொண்டு அயராது விணை செய்தால்
அவள் அருள் புரிவாள் அகத்திருப்பாள் அணைத்திருப்பாள் எனவே (செய்க)
No comments:
Post a Comment