அன்றொரு நாள் இளமைத் தீயில்
சுட்டெரித்தேன் பற்பல வாச மலர்களை
மல்லிகைக் காதல்
செம்பருத்தி மோகம்
தாமரை அறிவு
இன்று வயது கூடுகிறது
எழுத்தாணி முனையில்
பழஞ் சாத்திரத்தின் பனையோலைகள்
எரிந்து சாம்பலாகின்றன
எது எப்படியோ
எரித்தல் திண்ணம்
எரிவதும் திண்ணம்
In English - http://agnibarathi.blogspot.in/2013/01/destiny.html
No comments:
Post a Comment