வர வேண்டாம் வரலட்சுமி நீ வர வேண்டாம் வந்து
வரமொன்றும் தர வேண்டாம் அம்மா தர வேண்டாம்
தர வேண்டாம் தரணியிலே செல்வமும் புகழும் எனக்கு
வர வழியேதும் செயல் வேண்டாம் வரலட்சுமி நீ (வர வேண்டாம்...)
வரம் வேண்டிக் காத்திருப்போர் பலருண்டு பரந்த இத்
தரணியிலே அவரிடம் போய் நீயுன் அருள் மலர்க்
கரம் நீட்டிக் கனிவோடு அருள் புரிவாய் தாயே உனக்குமது
அறம் செய்யும் வழியாகும் உய்வும் உண்டாகும் எனவே (வர வேண்டாம்...)
வரம் வேண்டாம் வரமொன்று நான் வாங்கி விட்டேன் என்றும்
சரண் என்று சக்தியவளை நம்பிவிட்டேன் இனியிங்கு எனக்கு
மரணமே வந்தாலும் வரமாகுமன்றோ மாற்றெதுமுண்டோ அரி
அரனுக்கும் மேலான வரமிதுவன்றோ எனவே (வர வேண்டாம்...)
In English - http://agnibarathi.blogspot.in/2014/08/a-song-for-varalakshmi-viratham.html