வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு என்ன பயன்?
வெட்ட வெளியைப் பார்!
விண்ணெல்லாம் மீன்விளக்கு.
நட்ட நடுவில்
நிலவென்னும் குத்து விளக்கு.
விழி திறந்து ஒளி பருகி
நெற்றியில் நெருப்பை வைத்தேன்
நானும் அடிமுடி அறிய முடியாதொரு அரனே!
எம் உடலும் ஒளிர்விடும் தணல் குன்றே!
என்னை வலம் வருவாய் ஏழை உலகே
உன்னை உய்வுறச் செய்திடும் என் தமிழ்
வெட்ட வெளியைப் பார்!
விண்ணெல்லாம் மீன்விளக்கு.
நட்ட நடுவில்
நிலவென்னும் குத்து விளக்கு.
விழி திறந்து ஒளி பருகி
நெற்றியில் நெருப்பை வைத்தேன்
நானும் அடிமுடி அறிய முடியாதொரு அரனே!
எம் உடலும் ஒளிர்விடும் தணல் குன்றே!
என்னை வலம் வருவாய் ஏழை உலகே
உன்னை உய்வுறச் செய்திடும் என் தமிழ்