Monday, February 23, 2015

எட்டாக் கனி

சிலை*யொன்றும் வளைத்ததில்லை சேனையும் சேர்த்ததில்லை
அலை கடலைத் தாண்டி வரும் ஆற்றல் ஏதும் எனக்கில்லை
வலை வீசும் விழியழகே வஞ்சமில்லா உயிரழகே
கலையாத நின் காதல் நான் அடைவது எவ்வாறே?

*சிலை - வில் 

Wednesday, February 18, 2015

சாரல்

அடை மழைக்குப் பின் சாரல்
கடைசியில் அணைத்து நீ தந்த
நெற்றியில் முத்தம்

In English - http://agnibarathi.blogspot.in/2015/02/drizzle.html