காலையில்...காதல் கவிதை கதிர்...
எமக்குத் தொழில் பாட்டு
Tuesday, July 07, 2009
மோகம்
தழுவித் தோளிரண்டும் திருகிடப் பற்றி
பழுத்த மாரிரண்டும் பாழெனப் போக
அழுத்தி அனலணைத்து அசையா மலையதை
கழுவெனக் கழுமிக் களித்தது மேகம்
கழு - கழுமரம். a stake to impale.
கழுமி -
புணர்ந்து, இணைந்து, மயங்கி, மிகுத்து, திரண்டு
ஆங்கிலம்
Friday, February 13, 2009
அகம் களித்த கத்தினின்று
சகம் அளிக்கும் சக்தியே
மகத்தினில் மனம் அடங்கி
முகத்தில் தோன்றும் சோதியே
புகபுகப் புவிகள் எங்கும்
மிகுத்தெழுந்த மோகமே
கணம் துளைத்து அனல் புகுத்து
யுகம் படைக்கும் யோகமே
அறத்தினோடு அழகும் சேர்த்
திறந்திடாத இன்பமே
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)